அதிகர் விஜய் பல்வேறு நற்பணிகளுக்கு பெயர் போனவர். அவரது தமிழக வெற்றிக் கழகத்தினர் ரத்ததானம், அன்னதானம், மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், மருத்துவ முகாம் என மக்களுக்கு பல நற்பணிகளை செய்து வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விலையில்லா விருந்தகம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆணைக்கிணங்க சிவகங்கை தெற்கு மாவட்ட மகளிர் அணி தலைமை திருமதி. தமிழரசி பிரதீப் சார்பில் சிவகங்கையில் விலையில்லா விருந்தகம் தொடங்கப்பட்டது.
இவ்விழாவினை சிவகங்கை தெற்கு மாவட்ட தலைவர் முத்துப்பாரதி அவர்கள் துவங்கி வைத்தார். இவ்விழாவில் சிவகங்கை தெற்கு மாவட்ட செயலாளர் காளீஸ்வரன், பொருளாளர் Dr.கண்ணதாசன் மற்றும் நகர தலைவர் தாமரைப்பாண்டி, நகரசெயலாளர் கோபி, முத்துப்பாண்டி மற்றும் மனோஜ், பாதாள கருப்பு, சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழா சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த மகளிர் அணி நிர்வாகிகள் திருமதி.ராஜேஸ்வரி , ராஜலட்சுமி, ரேவதி திருமதி. வைதேகி, திருமதி. லதா, கலந்து கொண்டு சிறப்பித்தனர்.