Close
ஜனவரி 7, 2025 11:47 மணி

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களும் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில், உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று (டிச.2ம் தேதி) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களும் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் எச்ஐவி, எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி கையெழுத்து இயக்கத்தினை விழிப்புணர்வு பதாகையில் கையெழுத்திட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) அருணா, துணை இயக்குநர் (குடும்ப நலம்) கவிதா, மாவட்ட திட்ட மேலாளர் (மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு) துரைசாமி உட்பட தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க ஊழியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top