Close
டிசம்பர் 4, 2024 8:21 காலை

விவசாயிகளுக்கு மழைக்காலத்தில் சின்ன வெங்காய பயிர் பாதுகாப்பு இலவச பயிற்சி..!

சின்ன வெங்காயம் -கோப்பு படம்

நாமக்கல்:
மழை காலத்தில் சின்ன வெங்காயத்தை பாதுகாக்க ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம் குறித்து, நாமக்கல்லில் வருகிற 6ம் தேதி இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய (கேவிகே) தலைவர் டாக்டர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள, வேளாண் அறிவியல் நிலையத்தில் வருகிற 6ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு, மழை காலத்தில் மழை காலத்தில் சின்ன வெங்காயத்தை பாதுகாக்க ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் மழைக்காலத்தில் சின்ன வெங்காயம் பயிரைத் தாக்கும் பூச்சிகளையும், நோய்களையும், இயற்கை மற்றும் செயற்கை முறையில் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும், வளர்ச்சியூக்கிகள் பற்றியும், குறைந்த செலவில் அதிகம் லாபம் பெற தேவையான தொழில் நுட்பங்கள் குறித்தும் பயற்சி அளிக்கப்படும்.

இதில் விவசாயிகள், விவசாயம் கலந்த களப்பணியாளர்கள், பண்ணையாளர்கள், ஊரகமகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் வேளாண் அறிவியல் நிலையத்தை நேரில் அனுகியோ அல்லது 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்களை தொடர்புகொண்டே முன்பதிவு செய்து பயிற்சியில் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top