பெண் தொழிலாளர்களுக்கென தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என தோழி பெண் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் தீர்மானம் – ஆய்வறிக்கை வெளியீட்டார் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி
தோழி பெண் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் மாநில அளவிலான பெண் தொழிலாளர்கள் மாநாடு மற்றும் உள்ளக புகார் குழு ஆய்வறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள டி.எம்.எஸ்.எஸ் ஹாலில் திருப்பத்தூர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாநாட்டை துவக்கி வைத்து ஆய்வறிக்கை வெளியிட்டார்.
இந்நிகழ்வில் கரூர் நாகலட்சுமி, புதுக்கோட்டை லலிதா, தர்மபுரி லட்சுமி, தஞ்சாவூர் சாமுண்டீஸ்வரி மற்றும் மாநில பெண் தொழிலாளர்கள் அமைப்பின் நிர்வாகி சுந்தரபாபு, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் விஜயலட்சுமி, தேசிய மக்கள் சுகாதார அமைப்பின் நிர்வாகி அமீர்கான், திருச்சி சீதாலட்சுமி, உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து திரளாக பெண்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இம்மாநாட்டில் பெண் தொழிலாளர்களுக்கென தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும், பாதுகாப்பான வேலை இடம் உறுதி செய்ய உள்ளக புகார் குழுவினை அனைத்து பணியிடங்களிலும் அமைத்து கண்காணிக்க தனி அலுவலர்களை நியமிக்க வேண்டும், தொழிலாளர்கள் நலத்துறை உள்ளக புகார் குழுவினை நடைமுறைப்படுத்துவதில் பங்கேற்கச் செய்ய தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறது,
அனைத்து வகை தொழிலாளர்களையும் தொழிலாளர்களாக அங்கீகரித்து அரசின் அனைத்து தொழிலாளர்கள் சட்ட விதிமுறைகள் மற்றும் சமூக பாதுகாப்புக்கு திட்டங்களுக்கு கிடைக்க செய்ய தமிழக அரசு அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.