விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.
விவசாயிகளின் நிலங்களுக்கு போலி பட்டா கொடுத்து விளை நிலங்களை விலை நிலங்களாக மாற்றம் செய்ய வழி வகுக்கும் திருவெறும்பூர் தாசில்தாரை கண்டித்தும், காவிரி ஆற்றில் மணல் அள்ளி கோடி கணக்கில் வருவாய் பார்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சிவகங்கை, SIPCOT போன்றவைகளுக்கு காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டுபோவதை தடுப்பணை கட்டி கொண்டு செல்ல வேண்டும், தற்போது பெய்த மழையில் அழிந்த விவசாய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000/- இழப்பீடு கொடுக்க வேண்டும், விவசாய பயிர்களை காட்டு பன்றிகள் தொடர்ந்து அழித்து வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு அமர்ந்து கோஷங்கள் முழங்க போராட்டம் நடத்தினார்கள்…
விவசாயிகள் நடத்திய இந்த திடீர் போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படு்த்தியது.