Close
டிசம்பர் 12, 2024 4:35 மணி

மர்ம நோய் தாக்கி 7 பசுக்கள் உயிரிழப்பு: நிவாரண நிதி வழங்கிய எம்.பி ராஜேஷ்குமார்

மோகனூர் அருகே மர்ம நோய் தாக்கி, 7 பசுக்கள் உயிரிழந்ததால் பாதிக்கப்பட்ட, விவசாயி குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரண உதவியை ராஜேஷ்குமார் எம்.பி. வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா, ராசிபாளையம் ஊராட்சி, மொட்டகாளிப்பட்டியில் வசிக்கும் சுப்ரமணி மற்றும் செல்வி தம்பதியர் மாட்டுப்பண்ணை வைத்து மாடுகளை வளர்த்து வருகின்றனர்.

இவர்களுக்கு சொந்தமான 7 கறவை மாடுகள் சமீபத்தில் மர்ம நோய் தாக்கி அன்மையில் இறந்தன. அவர்கள் தங்களுக்கு அரசு நிவாரண உதவி அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி., அக்கோரிக்கையினை ஏற்று, நாமக்கல் ஆட்சியரிடம் தகவல் தெரிவித்தார்.

இதைனையடுத்து, மாவட்ட ஆட்சியரின் விருப்ப உரிமை நிதியில் இருந்து விவசாயி குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் வழங்க ஆட்சியர் அனுமதி அளித்தார்.

இதையொட்டி, ராஜேஷ்குமார், எம்.பி. விவசாயி சுப்ரமணியின் வீட்டிற்கு நேரில் சென்று ரூ. 2 லட்சம் நிவாரண நிதிக்கான செக்கை வழங்கினார்.
நிகழ்ச்சியில், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், வட்டாட்சியர் மணிகண்டன், கால்நடை மருத்துவர் காளிமுத்து, மோகனூர் ஒன்றிய திமுக செயலாளர் நவலடி, பொன்சித்தார், கிருபாகரன், பொன்னுசாமி, ராம்குமார், ராஜாமணி, சின்னையன், சித்ரா, வேலுபாலாஜி, வரதராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top