Close
டிசம்பர் 12, 2024 11:34 காலை

நாமக்கல் முருகன் கோயிலில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பிறந்த நாள் விழா

நாமக்கல் முருகன் கோயிலில் நடைபெற்ற, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பிறந்த நாள் விழாவில், பொதுமக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு  நாமக்கல் முருகன் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நாமக்கல் மாநகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தி பிறந்த நாள் விழா, நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள முருகன் கோயிலில் நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, கோயிலில் சோனியாகாந்தியின் பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பொதுமக்களுக்கு சர்க்கரைப்பொங்கல் வழங்கப்பட்டது.

மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் மோகன் தலைமையில் நடைபெற்ற விழாவில், நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் சித்திக், முன்னாள் மாவட்ட தலைவர் வீரப்பன், செய்தித் தொடர்பாளர் டாக்டர் செந்தில், கொல்லிமலை வட்டார காங்கிரஸ் தலைவர் குப்புசாமி, சாந்தி மணி, எஸ்சிஎஸ்டி பிரிவுத் தலைவர் பொன்முடி, பொதுக்குழு உறுப்பினர் ஜோதி, முன்னாள் மாணவர் காங்கிரஸ் தலைவர் டாக்டர் பாலாஜி, மாவட்ட சேவாதள அமைப்பாளர் பெரியசாமி, பாலு, ஐஎன்டியூசி பழனிவேலு, சரவணன், மாநகர காங்கிரஸ் நிர்வாகிகள் செல்வம், ஜபூருல்லா, லோகநாதன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top