திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) டிசம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது. இத்திருவிழாவையொட்டி, நாளை அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சந்நிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
இந்த ஆண்டு தீபத் திருவிழாவிற்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டலம் சார்பில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஈரோடு மண்டல பொதுமேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டலம் சார்பில் கார்த்திகை தீபம் திருநாளை முன்னிட்டு டிச.14ம் தேதி வரை ஈரோட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு கூடுதலாக 75 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்