Close
ஏப்ரல் 2, 2025 9:03 காலை

தொடர் மழையின் காரணமாக மீனாட்சி அம்மன் கோவில் அருகே சாலையில் குளம் போல் தேங்கிய மழை நீர்

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மதுரை மாவட்டத்திற்கு இன்று கன மழை காண ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று இரவில் இருந்து பரவலாக மழை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பெய்து வருகிறது,
சாரல் மழை முதல் மிதமான மழை விட்டு விட்டு தொடர்ந்து, பெய்து வருகிறது. குறிப்பாக பழங்காநத்தம் வில்லாபுரம், தத்தனேரி, ஜெய் ஹிந்துபுரம்,  சுப்பிரமணியபுரம், மாடக்குளம். பெரியார் பேருந்து நிலையம் சிம்மக்கல், கோரிப்பாளையம், செல்லூர், ஆரப்பாளையம், மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றுயுள்ள பகுதிகள், தாழ்வான பகுதிகளில் அங்கங்கே வெள்ளநீர் தேங்கியுள்ளது.
குறிப்பாக, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள கிழக்கு ஆவணி மூல வீதியில் உள்ள சாலையில் மழை நீர் குலம் போல் தேங்கி காணப்படுகிறது.

இதனால், அவ்வழியாக செல்லும் வாகனங்கள் வெள்ளநீரில் மிதந்த வண்ணம் அப்பாதையை கடந்து செல்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top