மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி குலசேகரன்கோட்டை சாணாம்பட்டியில், சிறுமலை அடிவாரத்தில் இயற்கை எழில்சூழ்ந்த சிறுமலை ஓடைகரையில் பதினெண் சித்தர் பீடம் அமைந்துள்ளது.
ஆலயத்தில் பதினெண் சித்தர் பீட அறக்கட்டளை சார்பாக கார்த்திகை பௌர்ணமியையொட்டி மகா யாகசாலை சிறப்பு பூஜையும், சித்தர் பீடத்திற்கு பதினெட்டாம்படி கருப்பனசாமி பீடத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை அர்ச்சனைகள் செய்யப்பட்டது.
மதியம் அன்ன தானமும், இலவச அக்குபஞ்சர், சித்தா, ஆயுர்வேதிக் மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை முகாமும் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு, தொழி லதிபர் அன்பழகன் தலைமை தாங்கி அன்னதானத்தை தொடக்கி வைத்தார். ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் இளங்கோவன், முன்னாள் கூட்டுறவு சங்கத்தலைவர் பொன்ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிர்வாக அறங்காவலர் பெ.விஜய பாஸ்கர் வரவேற்றார். இந்த மருத்துவ முகாமை, விவசாய விஞ்ஞானி சி.ஆர். ராஜேந்திரன் தொடக்கி வைத்தார். இதில், மருத்துவர்கள் லிங்குசெல்வி தலைமையில் மருத்துவக் குழுவினர் மூட்டு வலி, முதுகுவலி, தலைவலி, கால்ஆணி, சொரியாசிஸ், சளி, ஆஸ்துமா, சர்க்கரை உள்பட அனை த்துவகை நோய்களுக்கும் மருத்துவ சிகிச்சையளித்து மருந்து மாத்திரைகள் வழங்கினர்.
முடிவில், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் இரும்பாடி ராஜேந்திரன் நன்றி கூறினார்.