Close
டிசம்பர் 18, 2024 10:19 காலை

சாமநத்தம் ஊராட்சியில் தொடர் மழையினால் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்: பொதுமக்கள் அவதி

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சாமநத்தம் ஊராட்சி பெரியார் நகர் பகுதியில் சுமார் 3000 மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர்

இங்குள்ள வீடுகளில் கழிவு நீர் செல்ல வழி இல்லை. மேலும் தற்போது பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து கழிவு நீரும் மழை நீரும் சேர்ந்து வீடுகளுக்குள் சென்று பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.
இது குறித்து, சமநத்தம் ஊராட்சியில், புகார் அளித்தும் ஊராட்சி ஒன்றியத் திற்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மக்களுக்கு அடிப்படை வசதிகளான சாக்கடை மற்றும் சாலை வசதிகள் அமைத்து மழை நீரை வெளியேற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top