Close
டிசம்பர் 18, 2024 8:20 மணி

நாமக்கல் பகுதியில் வரும் 18ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிப்பு

புதுக்கோட்டை

நாமக்கல் பகுதியில் வரும் 18ம் தேதி மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாமக்கல் மின்சார வாரிய சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் கோட்டத்தில், சீரான மின்சார விநியோகம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி நாமக்கல் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வரும் 18ம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் நிறுத்தி வைக்கப்படும்

இதன் காரணமாக நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, முதலைப்பட்டி, போதுப்பட்டி, என்ஜிஓ காலனி, வீசானம், சின்ன முதலைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், வரும் 18ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார சப்ளை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top