Close
டிசம்பர் 18, 2024 10:49 மணி

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 18 பேருக்கு ரூ.58.34 லட்சம் நலத்திட்டம்: கலெக்டர் வழங்கல்..!

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா வழங்கினார்.

நாமக்கல் :

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 18 பேருக்கு ரூ. 58.34 லட்சம் மதிப்பில், நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில், முதியோர், விதவை மற்றும் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து, மொத்தம் 480 மனுக்கள் வரப்பெற்றன.

அவற்றை பெற்றுக் கொண்ட கலெக்டர், பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது விரைந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து, தாட்கோ மூலம், 15 பேருக்கு மளிகை கடை, பயணியர் வாகனம், கறவை மாடு, ஆடு வளர்ப்பு தொழில்கள் மேற்கொள்ள அரசு மானியத்துடன் ரூ. 58.34 லட்சம் மதிப்பில் தொழில் கடனுதவிகள் வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 3 பேருக்கு, கிரட்ஸ் ஊன்றுகோல், காதொலிக்கருவி என, மொத்தம் 18 பேருக்கு ரூ. 58.34 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். டி.ஆர்.ஓ.., சுமன், ஆர்.டி.ஓ. சுகந்தி, தொழிலாளர் உதவி கமிஷனர் இந்தியா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top