நாடாளுமன்றகூட்டத்தொடரில், அம்பேத்கார் குறித்து விமர்சனம் செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து, நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அம்பேத்கார் குறித்து விமர்சனம் செய்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., ஏற்பாட்டின் பேரில், நாமக்கல் அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். மாநில மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் ராணி, நாமக்கல் மாநகர மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, டாக்டர் மாயவன், நாமக்கல் நகர செயலாளர்கள் ராணா ஆனந்த், சிவகுமார், மாவட்ட துணை செயலாளர் நலங்கிள்ளி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் கிருபாகரன் உள்ளிட்ட திரளான திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
முன்னதாக, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற, மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் 102வது பிறந்த நாள் விழாவில் திரளான திமுகவினர் கலந்துகொண்டு, அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.