மதுரை விமான நிலையம் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி 24 மணி நேரமும் செயல்படும் என, இந்திய விமான நிலையம் அறிவித்திருந்த நிலையில், அதன் முதல் கட்டமாக நாளை டிசம்பர் 20ஆம் தேதி முதல் மதுரையில் இருந்து இரவு 10:45 மணிக்கு கடைசி இண்டிகோ விமானம் சென்னை புறப்படும் என, அறிவிப்பு வந்துள்ளது.
ஏற்கனவே, சென்னையில் இருந்து 8:45 மணிக்கு வந்து மீண்டும் மதுரையிலிருந்து 9 மணிக்கு கடைசி விமானம் சென்று வந்தது. தற்போது 24 மணி நேர சேவை அறிவித்த பிறகு முதல் விமானமாக சென்னையிலிருந்து 9:25 மணிக்கு புறப்பட்டு இரவு 10:20 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்து.
பின்னர், மீண்டும் பயணிகளுடன் 10:45க்கு மதுரை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு 12:05 மணிக்கு சென்னை சென்றடையும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை விமான நிலைய 24 மணி நேர சேவையின் முதல் கட்டமாக இது பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.