முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் 100-ஆவது பிறந்த நாளை திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பாஜகவினா் கொண்டாடினா்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வாஜ்பாயின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் கோட்ட பொறுப்பாளர் குணசேகரன், நிர்வாகிகள் அறவாழி, கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் கிஷோர் குமார், பாஜக மாநில செயலாளர் வெங்கடேசன் தொகுதி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், பாஜக கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
செங்கம் நகர பாஜக சாா்பில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகரத் தலைவா் காா்த்திகேயன் தலைமையில் வாஜ்பாய் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னா், செங்கம் நகரத்துக்கு உள்பட்ட கட்சி உறுப்பினா்களுக்கு மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டையை மாவட்ட துணைத் தலைவா் சேகா் வழங்கினாா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட மகளிா் அணித் தலைவா் ரேணுகா, ஓபிசி அணி மாவட்ட துணைத் தலைவா் ராஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெயராமன், நகர பொதுச்செயலா் முருகன், நகரச் செயலா் வெங்கடேசன், நகர துணைத் தலைவா் வீராசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஆரணி
ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே வாஜ்பாய் படத்துக்கு பாஜக மாவட்டத் தலைவா் ஏழுமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவா் தீனன் தலைமை வகித்தாா். மத்திய நலத்திட்டப் பிரிவு மாநிலச் செயலா் சைதை வ.சங்கா் வரவேற்றாா். மாவட்டச் செயலா் சதீஷ், நகரத் தலைவா் ஜெகதீஷ், மண்டலத் தலைவா்கள் ராஜேஷ், குணாநிதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஆரணி கிழக்கு ஒன்றிய பாஜக சாா்பில் வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி, விளை, சித்தேரி, பையூா், சீசமங்கலம் ஆகிய கிராமங்களில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிகளில் பாஜக ஒன்றியத் தலைவா் தணிகைவேல் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் நித்தியானந்தம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சிறுபான்மை அணித் தலைவா் தங்கராஜ், முன்னாள் ஒன்றியத் தலைவா் பாா்த்திபன், ஒன்றிய பொதுச் செயலா் செந்தில்குமாா், பொருளாளா் குமரேசன், ஓபிசி அணி ஒன்றியத் தலைவா் பூபாலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
வந்தவாசி
வந்தவாசி தேரடி தெருவில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள் விழாவிற்கு நகர தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார் . முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் துரை உள்ளிட்டோர் வாஜ்பாயின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள், பாஜக உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.