மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோவிலில், முழு நேர அன்னதான திட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கள்ளழகர் கோவிலில் நாள் முழுதும் அன்னதானம் வழங்கும் திட்டம் இன்று முதல் துவங்கியது. காலை 10:00 மணிக்கு காணொளி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தை துவக்கி வைத்தார்,
இந்த நிகழ்ச்சியில், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், அறநிலைத்துறை ஆணையர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அழகர் கோவிலில், அமைச்சர் பி. மூர்த்தி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை இந்து சமய அறநிலை ஆட்சித் துறை இணை ஆணையர் செல்லத்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுவரை மதியம் 12:00 மணிக்கு, ஒரு வேளை மட்டும் தினம் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. வரும் நாட்களில் காலை 10:00 முதல், இரவு 8:00 மணி வரை அன்னதானம் வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.