தமிழக அரசின் விளையாட்டுத்துறைக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ், நாமக்கல் கூட்டுறவுத் துறையில் வாள் விளையாட்டு வீராங்கணை தமிழ்செல்வி முதுநிலை ஆய்வாளராக பொறுப்பேற்றார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டு துறையின் இட ஒதுக்கீட்டின் கீழ், நடப்பாண்டில் 100 விளையாட்டு வீரர் வீராங்கனைகள் அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என அறிவித்தார்.
அதன் அடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற்ற, வாள் விளையாட்டு வீராங்கனை தமிழ் செல்விக்கு, 3 சதவீத விளையாட்டுத்துறை இட ஒதுக்கீட்டின் கீழ், கூட்டுறவுத் துறையின் நாமக்கல் மண்டலத்தில் முதுநிலை ஆய்வாளராக பணி நியமனம் செய்து அரசு உத்தரவு வழங்கியுள்ளது.
இதையொட்டி தமிழ்செல்விக்கு அரசு உத்தரவின் நகலை, நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு வழங்கினார்.
இதனையடுத்து தமிழ்செல்வி, நாமக்கல் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலக கட்டுப்பாட்டில், நாமக்கல் துணைபதிவாளர் சரகத்தில், முதுநிலை ஆய்வாளர் பணியில் பொறுப்பேற்றுக் கொண்டார்