நாமக்கல்லில் வரும் 31ம் தேதி சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல் ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், சமையல் கேஸ் நுகர்வோர்கள் நலன் கருதி ஒவ்வொரு மாதமும் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அனைத்து எண்ணெய் மற்றும் கேஸ் நிறுவன மேலாளர்கள், கேஸ் ஏஜெண்டுகள், விநியோகஸ்தர்கள், சமையல் கேஸ் உபயோகிப்போர் மற்றும் தன்னார்வலர்களுக்கான, சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம், வருகிற 31ம் தேதி மாலை 3 மணிக்கு, நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
டிஆர்ஓ நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து சமையல் கேஸ் நுகர்வோரின் குறைகளை கேட்டறிய உள்ளார். சமையல் கேஸ் விநியோகம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகர்வோர்கள் இந்தகூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை தெரிவித்து மனுக்கள் அளித்து தீர்வு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.