சென்னை அண்ணா பல்கலையில் நடைபெற்ற, மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தைக் கண்டித்து, நாமக்கல்லில் பாஜ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி பாலியல் பலாத்காரம் செய்யபட்ட சம்பவத்தை கண்டித்து, பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தனக்குத் தானே சாட்டையடி கொடுத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் இச்சம்பவத்தை கண்டித்து, பல்வேறு அரசியில் கட்சியினரும், மாணவர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பாலியல் பலாத்கார சம்பவத்தை கண்டித்து பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் சந்தோஷ், மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோரைப் பின்பற்றி, இந்த வழக்கின் உண்மைத்தன்மையை வெளிக் கொண்டுவர வேண்டும். மேலும், சிபிஐக்கு வழக்கை மாற்ற விரைவாக தீர்ப்பளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜ மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் அருள், தமிழரசு, சதீஷ், அசோக், கார்த்திகேயன், கனகராஜ், முருகேசன் உள்ளிட்ட திரளான பாஜகவினர் கலந்துகொண்டனர்.