Close
ஏப்ரல் 17, 2025 12:17 காலை

அலறவிட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரெய்டு! அதிர்ந்த அரசு அதிகாரி

மோசடி வழக்கில் தொடர்புடைய சொத்துக்களை ஏலம் விடுவதை தாமதப்படுத்த லஞ்சம் பெற்றதாக துணை வட்டாட்சியரின் வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
கடந்த 2021-22-ம் ஆண்டில், நிதி மோசடி புகாரில் சிக்கிய தனியார் நிறுவன உரிமையாளர், மோசடி பணத்தில் வாங்கிய சொத்துக்களை, இருவருக்கு விற்பனை செய்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், சொத்துக்களை ஏலம் விட நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்நிலையில், ஏலம் விடுவதை தாமதப்படுத்த அப்போதைய தலைமை வருவாய் அலுவலராக இருந்த தனபாண்டி என்பவர், சுமார் ஒன்றரை லட்சம் மேல் லஞ்சம் பெற்றதாக புகாரளிக்கப்பட்டது.
அந்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், துணை வட்டாட்சியர்  தனபாண்டி வீட்டில் சோதனை நடத்தி ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

இதனால், அரசு அதிகாரி வீட்டில் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top