Close
ஏப்ரல் 18, 2025 12:41 காலை

புத்தாண்டை முன்னிட்டு ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் புத்தகக் கண்காட்சி

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புத்தகக் கண்காட்சி புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சி தொடக்க விழாவுக்கு வாலிபர் சங்கத்தின் நகரத் தலைவர் இதயம் முரளி தலைமை வகித்தார். முதல் விற்பனையை சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில துணைத் தலைவர் நா.முத்துநிலவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஜனார்த்தனன், செயலாளர் ஆர்.மகாதீர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராமையன், தமுஎகச மாவட்டப் பொருளாளர் கி.ஜெயபாலன், முன்னாள் நகரச் செயலாளர்கள் புதுகை பாண்டியன், ஆர்.சோலையப்பன், சங்கத்தின் நகரச் செயலளர் தீபக், பொருளாளர் ராமு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top