Close
ஜனவரி 7, 2025 5:09 மணி

மோகனூரில் மண்டல அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி:800 பேர் பங்கேற்பு

மோகனூரில் நடைபெற்ற மண்டல அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி

மோகனூரில் நடைபெற்ற மண்டல அளவிலான, ஓபன் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில், 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
பீஷ்மர் ஸ்கூல் ஆப் சிலம்பம் மார்சியல் ஆர்ட்ஸ், எஸ்.கே.சி. சிலம்பம் அறக்கட்டளை, ஜெய் மாருதி சிலம்பம் பயிற்சி பள்ளி சார்பில், உடலினை உறுதி செய் என்ற தலைப்பில், மண்டல அளவிலான ஓப்பன் சிலம்பம் சேம்பியன்ஷிப் போட்டி, மோகனூர் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

எஸ்.கே.சி., சிலம்பம் அறக்கட்டளை தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட சிலம்பக்கலை ஆசான்கள் மற்றும் பயிற்சியாளர்கள் சங்க தலைவர் ராஜேந்திரகுமார் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் மாரியம்மாள் போட்டியை துவக்கி வைத்தார்.

முதல் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு போட்டி நடத்தப்பட்டது. அதில், புதிய மாணவர்களுக்கு, நெடுங்கம்பு வார் சிலம்பம், நடுக்கம்பு வார் சிலம்பம், இரட்டைக்கம்பு வார் சிலம்பம் போட்டியும், தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு, ஒற்றைக்கம்பு தனித்திறமை போட்டியும் நடத்தப்பட்டது.
போட்டியில், நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களை சேர்ந்த, 800 மாணவ, மாணவியர் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். முடிவில், முதல் நான்கு இடங்களை பெற்ற மாணவ, மாணவியருக்கு கோப்பையும், பரிசுகளும் வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, மோகனூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ரவிச்சந்திரன், டாக்டர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பரிசு வழங்கினர்.

போட்டி நடுவராக சர்வதேச நடுவர் சந்துரு பங்கேற்றார். ஏற்பாடுகளை, ஜெய் மாருதி சிலம்பம் பயிற்சி பள்ளி தலைமை ஆசான்கள் மணிகண்டன், ரஞ்சித்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top