நாமக்கல் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார். மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளில், மொத்தம் 14 லட்சத்து 54 ஆயிரத்து 272 வாக்காளர்கள் உள்ளனர்.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலின்படி,
ராசிபுரம் (எஸ்சி) சட்டசபை தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,14,027, பெண் வாக்காளர்கள் 1,20412, மற்றவர்கள் 11 என மொத்தம் 2,34,450 வாக்காளர்கள் உள்ளனர்.
சேந்தமங்கலம் (எஸ்டி) சட்டசபை தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,20,244, பெண்கள் 1,26,827, மற்றவர்கள் 33 என மொத்தம் 2,47,104 வாக்காளர்கள் உள்ளனர்.
நாமக்கல் சட்டசபை தொகுதியில் ஆண்கள் 1,25,608, பெண்கள் 1,35,876, மற்றவர்கள் 56 என மொத்தம் 2,61,540 வாக்காளர்கள் உள்ளனர்.
பரமத்திவேலூர் சட்டசபை தொகுதியில் ஆண்கள் 1,05,471, பெண்கள் 1,15,438, மற்றவர்கள் 11 மற்றவர்கள் என மொத்தம் 2,20,920 வாக்காளர்கள் உள்ளனர்.
திருச்செங்கோடு சட்டசபை தொகுதியில் ஆண்கள் 1,11,497, பெண்கள் 1,19,144, மற்றவர்கள் 63 என மொத்தம் 2,30,704 வாக்காளர்கள் உள்ளனர்.
குமாரபாளையம் சட்டசபை தொகுதியில் ஆண்கள் 1,25,708, பெண்கள் 1,33,768, மற்றவர்கள் 78 என மொத்தம் 2,59,554 வாக்காளர்கள் உள்ளனர்.
மாவட்டத்தில் மொத்த ஆண் வாக்காளர்கள் 7,02,555, பெண் வாக்காளர்கள் 7,51,465 மற்றவர்கள் 252 என, மொத்தம் 14,54,272 வாக்காளர்கள் உள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டின் தொடர்ச்சியாக, இன்று முதல் 2025-க்கான தொடர் திருத்தப்பணிகள் நடைபெற உள்ளது. இத்தொடர் திருத்தப்பணியின்போது, 1.1.2025 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் (அதாவது 31.12.2006 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவர்கள்) தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம்.
மேலும், 17 வயது பூர்த்தியடைந்தவர்களும் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம். இவர்களின் பெயர் 18 வயது பூர்த்தியடையும் காலாண்டில் வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும்.
மேலும், இதுவரை வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரினை சேர்த்துக்கொள்ளாதவர்களும், திருத்தங்கள் செய்ய விரும்புபவர்களும் உரிய விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட மாநகராட்சி அலுவலகம், தாலுகா, நகராட்சி அலுவலகங்கள் மற்றும் ஆர்டிஓ அலுவலகங்களிலும் அளிக்கலாம் என கலெக்டர் தெரிவித்தார்.
நிழ்ச்சியில் டிஆர்ஓ சுமன், நாமக்கல் ஆர்டிஓ பார்த்தீபன், தேர்தல் தாசில்தார் செல்வராஜ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.