Close
ஜனவரி 9, 2025 6:06 மணி

டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்யக்கோரி கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம்

மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் அரிட்டாப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் 5,000 ஏக்கரில் பரப்பில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பிற்காக அறிவிக்கப்பட்டுள்ள ஏலத்தை உடனடியாக ரத்து செய்யக்கோரி மேலூர் பகுதியில் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இப்போராட்டத்திற்கு, விவசாயி ராஜேஸ்வரன் தலைமை தாங்கினார். தும்பைப்பட்டி ஊராட்சி மன்ற த்
தலைவர் பாட்டையா என்ற அயூப்கான் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து, தும்பைப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில், தும்பைப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடைகளை அடைத்து கண்ணில் கருப்பு துணி கட்டி டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய கோரி பொதுமக்கள் சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது.
போராட்டத்தில் உடையாம்பட்டி, தும்பைப்பட்டி, செட்டியார்பட்டி, கல்லம்பட்டி, லெட்சுமிபுரம், புதுப்பட்டி, சாலக்கிபட்டி, சேர்வைகாரன்பட்டி மற்றும் தாமரைப்பட்டி ஆகிய ஊர் பகுதிகளிலிருந்து 1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பல்வேறு சமூக நல இயக்கங்கள், விவசாய சங்கங்கள், சமூக ஆர்வலர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top