Close
ஜனவரி 8, 2025 2:43 மணி

நாமக்கல்லில் 10ம் தேதி கூட்டுறவுத்தறை பணியாளர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கூட்டுறவு சங்க பணியாளர்களின் குறைகளை தீர்ப்பதற்காக, வருகிற 10ம் தேதி பணியாளர் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து, நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி, கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களின் குறைகளை கேட்டு தீர்வு செய்யும் வகையில், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மண்டல அளவில் பணியாளர் நாள் நிகழ்வு நடத்தப்படும் என கூட்டுறவுத் துறை மானிய கோரிக்கையின் போது, கூட்டுறவுத்துறை அமைச்சர் அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து நாமக்கல் மண்டலத்தில் இரு மாதங்களுக்கு ஒரு முறை, 2வது வெள்ளிக்கிழமை அன்று கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்களின் குறை தீர்க்கும், பணியாளர் நாள் நிகழ்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. 4வது பணியாளர் நாள் நிகழ்ச்சி, வருகின்ற 10ம் தேதி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. கூட்டுறவு நிறுவன பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் தங்கள் குறைகள் தொடர்பான விண்ணப்பங்களை நேரடியாக வழங்கலாம். அந்த விண்ணப்பங்கள் நிகழ்ச்சியின்போதே ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு 2 மாதங்களுக்குள் தீர்வு செய்யப்படும்.
ஆகவே, நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையில் பணிபுரிந்து வரும் மற்றும் ஓய்வு பெற்ற அனைத்து நிலை பணியாளர்களும், தங்களுக்கு ஏதேனும் குறை இருப்பின், பணியாளர் நாள் கூட்டத்தினை பயன்படுத்திக்கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top