செவித்திறன் குறைபாடு உடைய 4ம் வகுப்பு மாணவனுக்கு, முதலமைச்சரின் மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் ரூ. 2.57 லட்சம் மதிப்புள்ள காக்லியர் மெசினை கலெக்டர் வழங்கினார்.
நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ், செவித்திறன் குறைபாடு உடைய 4ம் வகுப்பு மாணவன் மிதுன் வர்ஷன் என்பவருக்கு ரூ. 2 லட்சத்து 57 ஆயிரத்து 250 மதிப்பில் காக்லியர் மெசின் வழங்கினார்.
பின்னர் அவர் கூறியதாவது;
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்கள் உயிர்காக்கும் உயர் சிகிச்சைகளை பெறும் வகையில், முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம், பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகின்றது.
இத்திட்டத்தின் கீழ், அதிகபட்சம் ஆண்டு ஒன்றுக்கு குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் வரையில் கட்டணமில்லா சிகிச்சை பெறலாம். அங்கீகரிக்கப்பட்ட மொத்தம் 1,600 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைகள் பெற்று பயன்பெறலாம்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் செவித்திறன் குறைபாடு உடைய 4ம் வகுப்பு மாணவன் மிதுன் வர்ஷன் என்பவருக்கு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அரசு டாக்டர்கள் மூலமாக ரூ.2,57,250 மதிப்புள்ள காக்லியர் மெஷின் பொருத்தப்படுகிறது.
இந்த இயந்திரம் பொருத்திய பிறகு அந்த மாணவருக்கு பேச்சு பயிற்சி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
சிஇஓ மகேஸ்வரி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.