Close
ஜனவரி 15, 2025 3:01 மணி

பாவேந்தர் பாரதிதாசன் இலக்கிய பேரவை சார்பில் திருவள்ளுவர் தின கொண்டாட்டம்

நாமக்கல்லில் நடைபெற்ற திருவள்ளுவர் தின விழாவில், மாதேஸ்வரன் எம்.பி., கலந்துகொண்டு, திருவள்ளுவரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

நாமக்கல்லில் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கிய பேரவை சார்பில் நடைபெற்ற திருவள்ளுவர் தினவிழாவில், மாதேஸ்வரன் எம்.பி., கலந்துகொண்டு பொதுமக்களுக்கு புறநானூறு புத்தகங்களை வழங்கினார்.
ஒவ்வொரு ஆண்டும், தை மாதம் இரண்டாம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. தமிழ் புலவர் திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் வகையில், தமிழக அரசால் திருவள்ளுவர் தினம் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை சார்பில், மணிக்கூண்டு அருகில், திருவள்ளுவர் தினவிழா நடைபெற்றது. பேரவை தலைவர் புலவர் கருப்பண்ணன் தலைமை வகித்தார். செயலாளர் ரகோத்தமன் வரவேற்றார்.
நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் பங்கேற்று, திருவள்ளுவர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அனைவருக்கும் இலவசமாக புறநானூ புத்தங்கங்களை அவர் வழங்கினார்.

அப்போது, நாமக்கல்லில் திருவள்ளுவர் சிலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக மாதேஸ்வரன், எம்.பி., உறுதி அளித்தார்.

விழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பேரவை பொருளாளர் மதியழகன், பள்ளி துணை ஆய்வாளர் பெரியசாமி, சி.இ.ஓ. முன்னாள் நேர்முக உதவியாளர் சுப்ரமணி, நம்மாழ்வார் நடுநிலைப்பள்ளி ஜெயச்சந்திரன், பேராசிரியர் முத்துசாமி, இன்ஜினியர் சுப்பிரமணி, தமிழ் அறிஞர்கள், புலவர்கள், பொதுமக்கள் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top