திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் திருச்சிராப்பள்ளி மண்டல அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனர் இரா. பொன்முடி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி மண்டல பொது மேலாளர் முத்துகிருஷ்ணன், துணை மேலாளர்கள் சுரேஷ் குமார் (வணிகம்) சாமிநாதன்( தொழில்நுட்பம்) ரவி( பணியாளர் மற்றும் சட்டம்) ஜூலியஸ் அற்புத ராயன்( வழி வசூல் தாள் பிரிவு), மற்றும் போக்குவரத்துக் கழக பணியாளர்கள், அலுவலர்கள், மற்றும் தொழிற் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் போக்குவரத்து பணியாளர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன கயிறு இழுத்தல், மியூசிக் சேர், கண்ணை மூடி பானை உடைத்தல், லெமன் ஸ்பூன் போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு பொருட்களும் வழங்கப்பட்டன.