திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்காஸ்டாவின் சுவாமி தரிசனம் செய்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் மருத்துவர் மீனாட்சி சுந்தரத்தின் 60-வது திருமண விழா திருக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் சந்ததியில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த அறுபதாவது திருமண விழாவிற்கு தமிழ்நாடு முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் மருத்துவர் மீனாட்சி சுந்தரம் மற்றும் உமா தம்பதியினரை ஆசிர்வாதம் செய்து வாழ்த்துக்களை தெரிவித்தார் .
தொடர்ந்து அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் துர்கா ஸ்டாலின் உடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் கம்பன் மற்றும் குடும்பத்தினர், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் மற்றும் அறங்காவலர்கள் ராஜாராம், கோமதி குணசேகரன் , பெருமாள், திருக்கோவில் ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
முன்னதாக அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தந்த துர்கா ஸ்டாலின் சம்பந்த விநாயகர் மற்றும் அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனை அவர் தரிசனம் செய்தார். தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கோயில் பிரசாதத்தை வழங்கினர்.