நாமக்கல் :
நாமக்கல் பகுதியில் வரும் 22ம் தேதி தேதி, புதன்கிழமை மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் கோட்டத்தில், அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்சார விநியோகம் செய்வதற்காக, ஒவ்வொரு துணை மின் நிலையத்திற்கு உட்பட பகுதியிலும், மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாமக்கல் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வரும் 22ம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும்.
இதனால் நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, வசந்தபுரம், வேப்பனத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முதலைப்பட்டி, போதுப்பட்டி, என்ஜிஓ காலனி, வீசானம், சின்ன முதலைப்பட்டி உள்ளிட்ட இடங்களில் 22ம் தேதி, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.