Close
ஜனவரி 31, 2025 2:59 மணி

நாமக்கல் மாவட்டத்தில் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய 64 குற்றவாளிகள் கைது

சென்னை

கோப்பு படம்

நாமக்கல் மாவட்டத்தில், கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 64 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் வழக்குகளில், விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர்களைக் கைது செய்ய நீதிமன்றம் மூலம் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை பிடித்து கைது செய்வதற்காக, சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் வழக்குகளில் தொடர்பு டைய குற்றவாளிகளைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, இதுவரை 64 குற்றவாளி கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும், திருச்செங்கோடு காவல்நிலைய எல்லைக்கு உள்பட்ட நெசவாளர் காலனி, கூட்டப்பள்ளி, ஊஞ்சப்பாளையம்பகுதிகளில் 2017ம் ஆண்டு, வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

போலீசார் விசாரணை மேற்கொண்டு அதில் தொடர்புடைய முருகேசன், பிரபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு திருச்செங்கோடு ஜே.எம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவில், வழிப்பறியில் ஈடுபட்ட இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் போலீசார் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்துள்ளனர் என  தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top