திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கும், கிரிவலப் பாதையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் மற்றும் ரமண மகரிஷி ஆசிரமங்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .
வெளிநாடு, வெளி மாநில பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது அதேபோல், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்களும் அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தை மாதம் பிறந்த நிலையில் கடந்த வாரம் நடிகர் ஜெயம் ரவி மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் அண்ணாமலையார் கோயிலுக்கு திரைப்பட நடிகர் பாபி சின்ஹா சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்தார். முதலில் சம்பந்த விநாயகர் மற்றும் சாமி அம்பாளை அவர் தரிசனம் செய்தார். அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தார். தொடர்ந்து சிவாச்சாரியார்கள் பிரசாதத்தை வழங்கினர். கோயிலில் ஒரு இடத்தில் அமர்ந்து தியானம் செய்தார்.
அவர் மாஸ்க் அணிந்தபடி சாம்பல் நிற வேட்டி, ஆஃப் ஒயிட் நிற சர்ட் அணிந்திருந்தார். நெற்றியில் விபூதி பட்டை, சந்தனம், குங்குமம் வைத்திருந்தார். பிறகு அங்கிருந்து அவர் 14 கி.மீ. தூரம் கிரிவலம் சென்றார். இந்த நிலையில் அவர் கிரிவலம் சென்ற புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.