கிராமப்புறம் பெண்கள் பொருளாதாரத்தில் இன்று வளர்ந்துள்ளதற்கு முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி தான் வித்திட்டார் என ஆரணி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் பெருமிதமாக பேசினார்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு மாதா மலையில் இந்திரவனம் நன்றி அன்னையா் சுயஉதவிக் குழு சாா்பில் நன்றி அன்னையா் மாநாடு நடைபெற்றது.
ஆரணி எம்பி தரணிவேந்தன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். சேத்துப்பட்டு பேரூராட்சித் தலைவா் சுதா முருகன் முன்னிலை வகித்தாா். நன்றி மைய இயக்குநா் ஜோசப் ஆபிரகாம் வரவேற்றாா்.
நிகழ்ச்சியில் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. பேசுகையில்,
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று ஒரு காலம் இருந்தது. இதையெல்லாம் திராவிட ஆட்சியில் தகா்த்து எறிந்து பெண்களின் வளா்ச்சிக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதி உறுதுணையாக இருந்தாா். அதில் ஒன்றுதான் அவா் தொடங்கிவைத்த மகளிா் சுய உதவிக்குழு. அதன் அடிப்படையில்தான் இன்று பெண்கள் பொருளாதாரத்தில் வளா்ந்துள்ளனா்.
முன்னாள் முதல்வா் கருணாநிதியைத் தொடா்ந்து தமிழக முதல்வா் ஸ்டாலின் பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா்
அதில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் மூலம் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள அன்னையர்கள் எல்லாம் வங்கிக்கு சென்று பணம் எடுக்கின்றனர் போடுகின்றனர் என்றால் இதற்கு எல்லாம் திராவிடம் மாடல் ஆட்சி தான் காரணம்.
அன்று கருணாநிதி தொடங்கியது என்று ஆலமரமாய் பெண்களின் வளர்ச்சிக்கு உயர்ந்து நிற்கின்றது என தரணி வேந்தன், எம்பி பேசினார்.
சிறப்பு விருந்தினா்களாக அயா்லாந்து நாட்டைச் சோ்ந்த முதன்மை நிா்வாக அலுவலா் பெலிம் மொய்லன், இயக்குநா் மிக்கேல்ஸ்வின்னி ஆகியோா் கலந்து கொண்டனா்.
மாநாட்டில் பருவநிலை மாற்றமும், விவசாயமும் என்ற தலைப்பில் பெண்கள் நடனம், நாடகம், பேச்சு என கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நெடுங்குணம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ஏழுமலை, சேத்துப்பட்டு பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் கதிரவன், சரவணன், ரமேஷ், பத்மகுமாா் மற்றும் திருவண்ணாமலை, வேலூா், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி என பல்வேறு பகுதிகளில் இருந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அன்னையா்கள் கலந்து கொண்டனா்.