Close
ஜனவரி 30, 2025 11:25 மணி

சோழவந்தான் அருகே மூலவர் மீது வருடத்திற்கு இரண்டு தினங்கள் மட்டும் சூரிய ஒளி படும் அதிசயம்

சூரிய பகவானின் ஒளி மூலவர் பெருமாளின் பாதத்தில் பட்டு சிறிது சிறிதாக மேல் எழும்பி பெருமாளின் முகத்தில் பட்டு மறையும் அதிசயம்

சோழவந்தான் அருகேகருப்பட்டி கிராமத்தில் வைகை ஆற்றின் கரையோரத்தில் சோழவந்தானில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது வேணுகோபால் சுவாமி திருக்கோவில் .

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவிலானது வைகை ஆற்றின் சீற்றத்தால் அப்போது நகரின் மையப் பகுதியில் இருந்த இந்த திருத்தலம் மேடான பகுதிக்கு பொதுமக்கள் நகர்ந்ததன் காரணமாக ஆற்றின் கரையோரம் அமைய வேண்டிய நிலை உருவானது

இந்த நிலையில் 600 ஆண்டுகளாக கோயிலை யாரும் கண்டுகொள்ளாத நிலையில் கடந்த 2000 ஆவது ஆண்டு கோயில் திருப்பணி வேலைகள் மற்றும் மராமத்து பணிகள் செய்யப்பட்டது

இந்த நிலையில் கடந்த 25 ஆண்டுகளாக இந்த கோவிலின் வழியை கண்டுபிடித்து வழிபாடுகள் நடைபெறத் தொடங்கியது

அதன்பிறகு 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு அடுத்தடுத்து 2 கும்பாபிஷேகங்கள் நடத்தப்பட்டது

இருப்பினும், இந்த கோவிலுக்கு இன்றுவரை நேரடியாக பாதை வசதி இல்லாததால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வருவதில் கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது

குறிப்பாக கோயிலின் நான்கு புறங்களிலும் புதர் மண்டி ஆபத்தான நிலையில் கோவிலின் வெளிப்பிரகாரம் காணப்படுகிறது கோயிலுக்கு அருகில் உள்ள கோவில் கிணறு புதர்களால் மூடி ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.

கோயிலின் உள்புறம் மட்டும் அர்ச்சகர் மற்றும் பணியாளர்களால் பராமரிக்கப்பட்டு தூய்மையான முறையில் காணப்படும் நிலையில் கருப்பட்டி கிராமத்தில் இருந்து கோயிலுக்கு செல்லும் பாதை மிகவும் மோசமான நிலையில் பக்தர்கள் சென்றுவர முடியாத நிலையில் இருப்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் பொதுமக்களின் எண்ணிக்கையும் சொற்ப எண்ணிக்கையிலேயே காணப்படுகிறது

இருப்பினும் இந்த கோயிலில் உள்ளே வேணுகோபால் அருகில் நரசிம்மர் கோவிலும் மற்றும் துளசி மாடம் நவக்கிரகம் உள் கிணறு போன்றவை பாண்டிய மன்னர் காலத்து கட்டடக் கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக காணப்படுகிறது

மேலும் குருவித்துறை அருகில் உள்ள சித்திரை ரத வல்லப பெருமாள் கோவிலும் இந்த கருப்பட்டி வேணுகோபால் கோவிலும் ஒரே காலத்தில் கட்டிடக்கலையில் உருவாக்கப்பட்ட கோவில் என்று இங்குள்ள ஆன்மீகவாதிகள் கூறுகின்றனர்

இந்த நிலையில் கருப்பட்டியில் உள்ள வேணுகோபால் சாமியின் மூலவர் அறையில் உள்ள பெருமாள் சிலை மீது வருடத்திற்கு இரண்டு முறை சூரிய பகவானின் ஒளி மூலவர் பெருமாளின் பாதத்தில் பட்டு சிறிது சிறிதாக மேல் எழும்பி பெருமாளின் முகத்தில் பட்டு மறையும் அதிசயம் நடைபெறுவதாக இங்குள்ள ஆன்மீகவாதிகள் கூறினர்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை காலை ஆறு முப்பது மணி அளவில் கோவில் மூலவர் அறையின் அருகில் காத்திருந்தபோது அந்த அதிசயத்தக்க நிகழ்வு நடைபெற்றது. சுமார் 7 40 மணியளவில் சூரிய பகவானின் ஒளி மூலவர் அறையில் உள்ள பெருமாளின் பாதத்தில் பட்டு சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக சிறிது சிறிதாக பெருமாளின் முகம் வரை பட்டு ஒளிக்கீற்றாய் பக்தர்களுக்கு பரவசத்துடன் காட்சியளித்தது

இது குறித்து அங்குள்ள அர்ச்சகர் கிருஷ்ணன் கூறுகையில், பாண்டிய மன்னர் காலத்து கட்டடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு இது என்பதில் ஐயமில்லை. மூலவர் அருகில் உள்ள பெருமாளின் முகத்தில் சூரிய ஒளி படுமாறு 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள இந்த கோயிலின் சிறப்பு இன்று வரை வெளி உலகத்திற்கு தெரியாமல் இருப்பது வேதனையளிக்கிறது என்று தெரிவித்தார்

இதுகுறித்து அரசுத்துறை அதிகாரிகள் அறநிலைத்துறையினர் கோவிலை ஆய்வு செய்து கருப்பட்டி கிராமத்திலிருந்து கோவிலுக்கு வந்து செல்ல முறையான பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

கோயிலில் தினசரி பூஜைகள் நடப்பதற்கு உண்டான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் இந்த கோயிலின் பெருமைகள் பற்றி பொதுமக்களுக்கு தெரியும் வண்ணம் ஆங்காங்கே பேனர்கள் மூலம் தெரியப்படுத்த வேண்டும்.

மேலும் கோவிலை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கோயிலின் வெளிப்புறங்களில் உள்ள பகுதிகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்/ அதன் மூலம் பாண்டிய மன்னர் காலத்து இந்த கோயிலின் பெருமைகளை வெளி உலகத்திற்கு எடுத்துச் செல்லலாம்

அதற்கு அதிகாரிகள் மற்றும் அறநிலைத்துறையினர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்

இந்த நூற்றாண்டில் காணக் கிடைக்காத இது போன்ற நூற்றாண்டு கடந்த கோயில்களை மீட்டெடுத்து நமது நாட்டின் தொன்மை மாறாத கட்டிடக்கலை மற்றும் சிற்ப கலையை உலகத்திற்கு எடுத்துச் செல்லும் பணிகளை அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் என்பதே இந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

பாண்டியர் காலத்து கட்டடக்கலை என்பதற்கான மீன் சின்னம் பொறித்த கல்வெட்டு கோவிலில் உள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top