திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில அளவில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பொது விநியோகத் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட, நாமக்கல் கலெக்டருக்கு மாநில முதல் பரிசை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பில், மாநில அளவிலான நுகர்வோர் பாதுகாப்பு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு, மாநில அளவிலான நுகர்வோர் பாதுகாப்பு விருதுகளை வழ்ங்கிப் பேசினார்கள்.
விழாவில், நுகர்வோர் பாதுகாப்பு, நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பொது விநியோகத் திட்டம் தொடர்பான பணிகளில் சிறப்பாக செயல்பட்ட, நாமக்கல் மாவட்டத்திற்கு 2022-23 ஆம் ஆண்டில் மூன்றாம் பரிசும், 2023-24 ஆம் ஆண்டிற்கு முதல் பரிசும் வழங்கப்பட்டது.
நாமக்கல் கலெக்டர் உமாவிடம் விருதுக்கான சான்றிதழ் மற்றும் கேடயத்தை ஊரகவளர்ச்சித்தறை அமைச்சர் பெரியசாமி வழங்கிப் பாராட்டினார்.