கோவை ரத்தினபுரியை சேர்ந்த முருகேசன்(47). டிசைனர் இவரது மனைவி செந்தில் நாயகி(40)மற்றும் மகன் திலீப் (15)மகள் கனிகா (7) ஆகியோருடன் மதுரை டிவிஎஸ் நகரில் நடக்கும் திருமணத்திற்காக கோயமுத்தூரில் இருந்து மாலை 6 மணிக்கு காரில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.
அந்த கார் சமயநல்லூர் அருகே பரவை மீனாட்சி மில் காலனி முன்பாக திண்டுக்கல் மதுரை சாலையில்
இரவு 8.30 மணிக்கு வந்தபோது இன்ஜினில் ஏற்பட்ட பழுதால் புகையுடன் திடீரென்று சிறுபொறியாக கிளம்பிய தீயை கண்டுஅதிர்ச்சி அடைந்தார்.
உடனே முருகேசனும் அவரது குடும்பத்தாரும் காரை விட்டு இறங்கினர். அதன்பின் தீ மளமள என்று எரிய தொடங்கி முழுதும் பற்றி எரிந்து சேதமானது.
இதனால் அந்த பகுதியில் பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நின்றது இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவல் அறிந்த சமயநல்லூர் காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் மாயாண்டி மற்றும் காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் தல்லாகுளம் தீயணைப்பு நிலைய அதிகாரி அசோக் குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பரவைப் பகுதியில் திடீரென காரில் தீ பற்றி எரிந்ததால் பொதுமக்கள் திடீர் அச்சமடைந்தனர் பரவைக்கு சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோழவந்தான் தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வாகனம் சென்றிருந்தால் விரைவிலேயே தீயை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம் என பொதுமக்கள் கூறினர்
இனிவரும் காலங்களிலாவது அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் இருக்கும் பணியாளர்கள் தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்று மீட்ப பணிகளில் ஈடுபட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்