மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 56 ஆவது நினைவு நாள் தமிழகம் முழுவதும் திமுகவினர் அனுசரித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பெரியபாளையம் அடுத்த வடமதுரை அரசு தொடக்கப்பள்ளி அருகே உள்ள பேரறிஞர் அண்ணாவின் திரு உருவ சிலைக்கு ஒன்றியச் செயலாளர் பி.ஜெ.மூர்த்தி தலைமையில் கட்சி நிர்வாகிகளுடன் பேரணியாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். இதில் மாவட்ட நிர்வாகிகள் விபி. ரவிக்குமார், ஏனம்பாக்கம் சம்பத், வழக்கறிஞர்கள் சீனிவாசன்,முனுசாமி, ஜெயலலிதா சசிதரன், விஜய பிரசாத், சந்திரசேகர், முகமது மொய்தீன், மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் வடமதுரை அப்புன், பெரியபாளையம் ஐ.ராஜா, உமாபதி, சுந்தர் ஏழுமலை, லோகேஷ், பாக்கியலட்சுமி ரமேஷ், ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர் .
இதேபோல் ஆரணி பேரூர் திமுக சார்பில் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு பேரூர் செயலாளர் முத்து தலைமையில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் முன்னாள் செயலாளர்கள் ஜி பி வெங்கடேசன், டி.கண்ணதாசன், அவைத்தலைவர் ஜி. ரமேஷ், பொருளாளர் ஜி. கரிகாலன், துணைச் செயலாளர்கள் த.நிலவழகன்,மாவட்ட நெசவாளர் அணி டி.எஸ். குருவப்பா கவுன்சிலர் ரகுமான்கான், நீலகண்டன. ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்..