Close
பிப்ரவரி 23, 2025 11:51 காலை

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு பொது விருந்து: கலெக்டர் பங்கேற்பு

நாமக்கல் நரசிம்மசாமி கோயிலில் நடைபெற்ற பொது விருந்து நிகழ்ச்சியில் கலெக்டர் உமா கலந்துகொண்டு, பொதுமக்களுடன் உணவருந்தினார். அருகில் எம்எம்ஏ ராமலிங்கம்.

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு, நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயிலில் நடைபெற்ற பொது விருந்து நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உமா கலந்துகொண்டார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில், மறைந்த முதல்வர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு, நாமக்கல் நரசிம்மர் சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் உமா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் பூபதி, இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் (பொ) சுவாமிநாதன் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். திரளான பிரமுகர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள்  கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top