Close
பிப்ரவரி 23, 2025 2:10 காலை

நாமக்கல் புத்தகத் திருவிழா பெயரில் கட்டாய வசூல் வேட்டை: ஆசிரியர்கள் சங்கம் கண்டனம்

நாமக்கல் புத்தகத்திருவிழா பெயரில் கட்டாய பணம் வசூல் நடத்துவதைக் கண்டித்து, ஆசிரியர்கள் சங்கம் போராட்டம் அறிவித்துள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார், மாவட்டச் செயலாளர் சங்கர், பொருளாளர் பிரபு ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;
நாமக்கல்லில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 3வது புத்தகத் திருவிழா, நாமக்கல் கொங்கு திருமண மண்டபத்தில் 10 நாட்கள் நடைபெறுகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தகத் திருவிழாவிற்கு மாவட்டத்தின் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக்கு தலா ரு. 500 வீதம் தொகை வசூலிக்கப்பட்டு அதற்குரிய புத்தகம் பின்னர் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு நடைபெறும் புத்தகத் திருவிழாவிற்கு எவ்விதமான தகவலும் சொல்லாமல், கலந்தாய்வு எதுவம் நடத்தாமல், மேலிட உத்தரவு என்ற பெயரில் ஒவ்வொரு ஆசிரியரும் ரூ.100 வீதம் கட்டாயமாக கொடுக்க வேண்டும் என்று மட்டும் வாய்மொழியாக தெரிவித்து, வட்டாரக்கல்வி அலுவலர்களால் கட்டாய வசூல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இத்தககைய மேலிடத்து தகவல் மூலம் வசூல் எதற்கு என்று தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு வெளிப்படையாக கூற வேண்டும். தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கங்களிடம் எந்தவிதமான கருத்துக்களும் கேட்காமல் வசூல் நடைபெறுவது அதிர்ச்சித் தருகிறது.

புத்தகத் திருவிழா போன்ற நிகழ்வுகளுக்கு தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. அரங்குகள் அமைக்கும் புத்தகப் பதிப்பாளர்களிடம் பணம் வசூல் செய்ப்படுகிறது. நாமக்கல்லில் பல்வேறு தனியார் கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் சங்கங்களிடம் இருந்து லட்சக்கணக்கில் நன்கொடை வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆசிரியர்களிடம் இது போன்று கட்டாய பணம் வசூல் செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது.
நாமக்கல் வட்டார தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களிடம் கட்டாயப்படுத்தி வசூல் செய்த பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும். இந்த சட்டவிரோத செயல்பாடுகளைக் கண்டித்து நாமக்கல் வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு வரும் 7ம் தேதி, வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top