நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கலெக்டர் உமா தலைமை வகித்தார். கொத்தடிமை ஒழிப்பு உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
தொடர்ந்து, கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். முன்னதாக, நாட்டுப்புறக் கலைக்குழுவினரின் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் கமாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சந்தியா, சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் பிரபாகரன், தொழிலாளர் உதவி ஆணையர் முத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.