மதுரை இந்து மக்கள் கட்சி தலைவர் சோலை கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில்:
மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள தண்டாயுதபாணி முருகன் கோவில் செயல் அலுவலரை கண்டித்து இந்துமக்கள்கட்சி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.
மதுரை நேதாஜி ரோட்டில் அமைந்திருக்கும் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் விருப்பப்பட்டு அர்ச்சகர் தட்டில் போடும் காணிக்கைகளை திருக்கோவில் உண்டியலில் செலுத்த வேண்டுமென்று உத்தரவு விடப்பட்டிருப்பது, அர்ச்சகர்களை அவமதிக்கும் செயலாகும்.
இச்செயலை செய்த திருக்கோவில் செயல் அலுவலரை இந்துமக்கள்கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
பக்தர்கள் அர்ச்சகர் தட்டில் அளிக்கும் காணிக்கையை பிடுங்கி கோயில் உண்டியலில் போட சொல்வது இந்துசமய அறநிலையத்துறையின் உச்சக்கட்ட அராஜகம்.
திருக்கோவில் பணி புரியும் அர்ச்சகருக்கு இந்துசமய அறநிலையத்துறை சார்பில் சம்பளம் குறைவாக வழங்கப்படுகிறது. அர்ச்சகர்களுக்கு பக்தர்களுக்கு விருப்பப்பட்டு தட்டில் போடுவதும் உண்டியலில் செலுத்துவதும் பக்தர்களின் விருப்பம் .
தட்டில் விழும் காணிக்கைகளை பிடுங்கி உண்டியலில் போடவேண்டுமென்று திடீரென்று உத்தரவு போட்டால் இவ்வளவு காலங்கள் திருக்கோவிலில் பணிபுரிந்த அர்ச்சகர்களின் வாழ்வாதாரம் அவர்களது குடும்ப சூழ்நிலை என்னவாகும்.
அர்ச்சகர்களின் வயிற்றில் அடிக்கும் இத்திருக்கோவில் செயல் அலுவலருக்கு அதிகாரம் யார் வழங்கியது.
இச்செயல் இந்துசமய அறநிலையத்துறை சட்டத்திற்க்கு எதிரான செயலாகும். உண்டியலில் போட சொல்லும் அர்ச்சகர் தட்டில் விழும் காணிக்கையை வைத்து தான் திராவிட மாடல் அரசு ஆட்சி நடத்துகிறதா என சந்தேகம் எழுகிறது.
மேலும், அர்ச்சகர் தட்டில் வரப்பெரும் காணிக்கைகள் உண்டியலில் செலுத்தும் பணியினை திருக்கோவில் மணியம் மற்றும் காவலர்கள் கவனிக்க வேண்டும் என்று அர்ச்சகர்களை திருடர்களை போலவும், தட்டு காணிக்கையை உண்டியலில் செலுத்தாத அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அர்ச்சகர்களை மிரட்டல் விடுக்கும் தோனியில் உத்தரவிட்டுள்ள செயல் பிராமணர் சமூகத்தின் கால்புணர்ச்சியின் காரணமாக திராவிட மாடல் அரசின் அர்ச்சகர்களை காயப்படுத்துவதற்கான செயல் போல் தெரிகிறது.
அர்ச்சகர்களுக்கு இதுபோன்று நெருக்கடி தொந்தரவு கொடுப்பது தமிழக திருக்கோவிலில் அர்ச்சகர்களாக இருக்கும் ஒட்டுமொத்த பிராமணர் சமூகத்தை திருக்கோவிலை விட்ட வெளியேற்றுவதற்கான சதிதிட்டம் போல் தெரிகிறது.
எனவே, இத்திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அர்ச்சகர்களுக்கு எந்த ஒரு தொந்தரவு இல்லாமல் தண்டாயுதபாணி முருகப்பெருமானுக்கு பூஜை செய்யும் தீபாரதணை தட்டில் விழும் காணிக்கையை நம்பி வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் அர்ச்சகர்களுக்கு எப்பொழுதும் போல் தட்டில் விழும் காணிக்கை அர்ச்சகர்களுக்கே சொந்தம் என்றும், அர்ச்சகர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையிலும்,அவர்களது வாழ்வாதரத்தை சீர்குழைக்கும் வகையிலும் அர்ச்சகர் காணிக்கையை உண்டியலில் போட சொல்லும் உத்தரவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.
மேலும், அர்ச்சகர்களை அவமதித்து புண்படுத்தும் வகையில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து இந்துசமய அறநிலையத்துறை சட்டத்திற்கு எதிராக செயல்பட்ட இத்திருக்கோவில் செயல் அலுவரை, உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்.
இல்லையேல் அர்ச்சகர்களுக்கு எதிரான இந்துசமய அறநிலையத்துறையின் அராஜக செயலை கண்டித்து இந்துமக்கள்கட்சி சார்பில் மிகப்பெரிய போராட்டம் விரைவில் வெடிக்கும் என்பதை இந்த கண்டன அறிக்கை மூலமாக இந்துசமய அறநிலையத்துறைக்கு தெரிவித்து கொள்கிறேன். என ஹிந்து மக்கள் கட்சி தலைவர் சோலை கண்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அர்ச்சகர்களை அவமதிக்கும் வகையில் உத்தரவிட்ட இந்துசமய அறநிலையத்துறை: இந்து மக்கள் கட்சி கண்டனம்
