Close
பிப்ரவரி 23, 2025 4:05 காலை

மோகனூர் காந்தமலை முருகன் கோயிலில் தைப்பூச தேர்த்திருவிழா கோலாகலம்

மோகனூர் காந்தமலை முருகன் கோயிலில், தைப்பூசத்தை முன்னிட்டு நடைபெற்ற, தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மோகனூர் காந்தமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில், தைப்பூசத்தை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
மோகனூரில் பிரசித்தி பெற்ற காந்தமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இக்கோவிலில், ஆண்டு தோறும், தைப்பூச தேர்த்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தேர்த்திருவிழா, கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, தினசரி காலை 10 மணிக்கு அபிஷேகம், மாலை 6 மணிக்கு, வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த, 9ம் தேதி சுவாமி திருக்கல்யாணம் நடந்தது.
நேற்று காலை, 10:30 மணிக்கு, சுவாமி திருத்தேர் ஏற்றம் நிகழ்ச்சி நடந்தது. அதையடுத்து, தேர் வடம் பிடித்து இழுக்கும் தேரோட்டம் நடைபெற்றது. எம்.எல்.ஏ., ராமலிங்கம், டவுன் பஞ்சாயத்து தலைவர் வனிதா, துணைத்தலைவர் சரவணகுமார், அட்மா தலைவர் நவலடி, கவுன்சிலர் செல்லவேல், அறங்காவலர் குழு தலைவர் தென்பாண்டியன் நல்லுசாமி, உறுப்பினர்கள் செல்வசீராளன், டாக்டர் மல்லிகா, இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் சாமிநாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் உள்பட பலர் பங்கேற்றனர். ஆயிக்கணக்கான பக்தர்கள், திருத்தேர் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top