Close
ஏப்ரல் 17, 2025 12:31 காலை

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் ரத்த தான முகாம்

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற ரத்த தான முகாம்

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார்.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை  மருத்துவர்கள் கீர்த்தனா, ஸ்ரீராம், நிஷா, மற்றும் தனிஷ் குமார் கலந்துக் கொண்டு மாணவர்களுக்கு ரத்ததானம் செய்வதற்கான தகுதிகள், அவசியம் மற்றும் ஒரு ஆண்டில் எத்தனை முறை ரத்த தானம் செய்யலாம் என்பதைப் பற்றியும் ரத்த தானம் செய்வதினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பேசினர்.

மேலும், ரத்ததானம் மூலம் உடலுக்கு ஏற்படும் பலன்கள் பற்றிய விழிப்புணர்வையும் மாணவர்களிடையே பகிர்ந்து கொண்டனர். முகாமில் 40க்கும் மேற்பட்ட மாணவ மணவிகள் ரத்த தானம் செய்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் சந்திரசேகரன் மற்றும் நாமக்கல் மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர் வெஸ்லி ஆகியோர் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top