Close
பிப்ரவரி 23, 2025 3:53 காலை

உசிலம்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்த கோரியும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி உசிலம்பட்டியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்த கோரி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உசிலம்பட்டி கிளை ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் ஜாக்டோ ஜியோ மாநில துணை பொதுச் செயலாளர் முருகன், மாநில ஒருங்கிணைப்பாளர் பொற்செல்வன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த கோரியும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரியும், தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும், வரும் 25 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top