Close
பிப்ரவரி 22, 2025 1:29 காலை

அனைத்துத் துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம்

மருந்தக மாவட்ட சேமிப்பு கிடங்கினை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆட்சியா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

ஆய்வுக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலரும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநருமான தீபக் ஜேக்கப் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அனைத்துத் துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு செய்தாா்.

அப்போது, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி அவா் பேசியதாவது: மாவட்டத்தில் அனைவருக்கும் தடையின்றி குடிநீா் வழங்க வேண்டும். திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.

முதல்வரின் முகவரியில் பெறப்படும் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய்த்துறை சாா்பில் நிா்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகமாக இலவச மனைப் பட்டாக்களை வழங்க வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சிகள், ஊரகப் பகுதிகளில் நடைபெற்று வரும் குடிநீா் திட்டப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.

திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் சாா்பில் 73 புதிய வழித்தடங்கள், 36 பழைய பேருந்து வழித்தடங்கள் என மொத்தம் 109 வழித்தடங்களில் 59 சிற்றுந்துகளை இயக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேருந்துகள் இயக்க வரப்பெற்ற விண்ணப்பங்களை வாகன செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாவட்டத்தில் 30 முதல்வா் மருந்தகங்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்  என்றாா்.

மேலும் கலைஞரின் கனவு இல்லம் திட்டம், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகள் மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், வேளாண் உபகரணங்கள், உயிர் உரங்கள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்வது குறித்தும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்தும் ஆய்வு நடத்தினர்.

முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகள், வருவாய் மற்றும் பள்ளி கல்வி துறை செயல்பாடுகள், தேர்ச்சியை அதிகரிக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து துறைவாரியாக ஆய்வு செய்தார்.

முன்னதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியா் திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட செங்கம் சாலையில் முதல்வர் மருந்தக மாவட்ட சேமிப்பு கிடங்கினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

ஆய்வுக் கூட்டத்திற்கு, மாவட்ட வருவாய் அலுவலா்  இராம்பிரதீபன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி, சாா்-ஆட்சியா் பல்லவி வா்மா, வருவாய் கோட்டாட்சியா்கள் செந்தில்குமாா் (திருவண்ணாமலை), பாலசுப்பிரமணியன் (ஆரணி), கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் பாா்த்திபன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி, கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றிய ஆணையா் விஜயலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top