Close
பிப்ரவரி 22, 2025 8:17 காலை

போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான செயலியின் பயன்பாடுகள் குறித்து விளக்கம்

மொபைல் செயலி அறிமுகப்படுத்திய ஆட்சியர் மற்றும் எஸ் பி

போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க பிளே ஸ்டோரில் உள்ள Drug free TN செயலியின் பயன்பாடுகள் குறித்து  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்  தர்ப்பகராஜ், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விளக்கினார்.

போதைப்பொருள் , பிற போதைப் பொருட்கள் , தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் போன்ற போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஜனவரி 11 அன்று போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

போதையில்லா தமிழகத்திற்கான மொபைல் செயலியின் பயன்பாடு குறித்து விளக்கவும் , மேற்கண்ட செயலி மூலம் போதைப்பொருள் தொடர்பான புகார்களை மாணவர்களை ஊக்குவிக்கவும் அனைத்து கல்வி நிறுவனங்களின் (மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்) தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுடன் ஆய்வுக் கூட்டம் திருவண்ணமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கைபேசி செயலியில் play Store – ல் DRGU FREE TN என்கிற APP பதிவிறக்கம் செய்து போதை பொருட்கள் தொடர்பாக புகார்கள் பதிவு செய்வது குறித்து விளக்கப்பட்டது. அதில் உள்ள க்யூஆர் கோடு எஸ்கேன் செய்வதன் மூலம் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இது தொடர்பான புகார்கள் ரகசி ய ம் பாதுகாக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்  தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் இராம்பிரதிபன், முதன்மை கல்வி சுவாமி முத்தழகன், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் (பொ) செந்தில் குமார் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top