நாமக்கல் நகரில் வருகிற ஈஷா யோகா மையத்தின் சார்பில் முழு இரவு மகா சிவராத்திரி விழா நடைபெறுகிறது.
ஈஷா யோகா மையத்தின் நாமக்கல் கிளை சார்பில், மகா சிவாராத்திரி விழா வருகிற 26ம் தேதி மாலை 6 மணி முதல் 27ம் தேதி அதிகாலை 6 மணி வரை, நாமக்கல் கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் கோவை ஈஷா மையத்தில், ஆதியோகி சிவன் முன்பு, சத்குரு தலைமையில் நடைபெறும் மகா சிவராத்திரி விழா முழுமையாக நேரலையில் அகன்ற திரையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. சிவராத்திரி நாள் இரவு முழுவதும் விழித்திருந்து, மனித உடலில் முதுகுத்தண்டை நேராக வைத்து யோகா மற்றும் தியானத்தில் ஈடுபட்டால் உடல் அளவிலும், மனதளவிலும், ஆன்மீக நிலையிலும் அளப்பரிய பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
உலகின் மிகப் பெரிய விழாவாக கொண்டாடப்படும் இந்த சிவராத்திரி விழாவில் புகழ்பெற்ற கலைஞர்களின் இசை, நடனம் மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
விழாவில் சத்குரு வழிகாட்டும் தீவிரமான தியானங்களும், சத்குருவின் அருளுரைகளையும் கேட்டு ஆழமான ஆன்மீக அனுபவத்தை உணர அனைவரும் விழாவில் கலந்துகொள்ளலாம்.
மேலும் பிரசாதமாக விழாவில் கலந்துகொள்ளும் அவைருக்கும் மகா அன்னதானம் வழங்கப்படும் என ஈஷா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.