வருகிற மார்ச் 1ம் தேதி, நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் அனைத்து வார்டுகளிலும், திமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது என்று மாவட்ட திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் செயற்குழு கூட்டம், மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. அவைத்தலைவர் மணிமாறன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி, மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி, மாநில நிர்வாகிகள் டாக்டர் மாயவன், ராணி உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
வருகிற மார்ச் 1ம் தேதி, தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில், நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர, டபேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் திமுக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்றும், விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், கட்சியின் மூத்த உறுப்பினர்களை கவுரவித்தில், தூய்மைப்பணியாளர்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், அரசு மருத்துவமனையகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உதவிகள் வழங்குதல், அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு பென்சில் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்குதல், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு முதல்வரின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் திரளான திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.