Close
மார்ச் 1, 2025 5:34 காலை

கோரிக்கை நாயகன்: கலசப்பாக்கம் எம்எல்ஏவிற்கு பட்டம் வழங்கிய அமைச்சர்

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் வேலு

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம் கடலாடி காவல் நிலையத்தை இரண்டாகப் பிரித்து ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் புதிய காவல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் எ.வ வேலு கலந்து கொண்டு ஆதமங்கலம் புதூர் காவல் நிலையத்தை திறந்து வைத்து பேசுகையில்,

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் கலசபாக்கம் எம்எல்ஏ சரவணன் அதிக கோரிக்கை மனுக்களை வழங்குவது வழக்கம். முதல்வர் ஸ்டாலின் கலசபாக்கம் தொகுதி எம்எல்ஏ கோரிக்கைகளை நிறைவேற்றுவதால் தொகுதியில் 20 ஆண்டுகளில் நிறைவேற்றப்படாத திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கலசபாக்கம் தொகுதி மீது எனக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரைக்கும் சட்டமன்ற உறுப்பினர் சரவணனுக்கும் அதிகப்பற்று உள்ளது.  ஏனென்றால் தொகுதி கடந்த 20 ஆண்டு காலமாக மிகவும் பின்தங்கிய தொகுதியாக இருந்தது.

அதை கடந்த நான்கு ஆண்டில் எண்ணற்ற திட்டங்களும் சலுகைகளும் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் கோரிக்கையின் பேரில் தொடர்ந்து வளர்ச்சி பணிகள் அதிகளவு வழங்கப்பட்டு வளர்ச்சி பாதையில் கலசபாக்கம் தொகுதி செல்கிறது. அதற்கு அவருடைய அப்பா முன்னாள் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெரியவர் பெ.சு.திருவேங்கடமும் ஒரு காரணம்.

கலசபாக்கம் தொகுதி என்றாலே முதலில் ஞாபகம் வருவது அவருடைய அப்பா தான். அதேபோல் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தில் விவசாயத்துறையை பற்றி பேச வேண்டும் என்றாலே முன்னாள் முதலமைச்சர் தலைவர் கலைஞரும் சரி முதலமைச்சரும் ஸ்டாலினும் சரி முதலில் கூறப்படும் பெயர் பெரியவர் பெ.சு.திருவேங்கடம் தான். அதனால் முதலமைச்சருக்கும் அமைச்சர் ஆகிய எனக்கும் கலசபாக்கம் தொகுதி மீது தனி அக்கறை உள்ளது.

கோரிக்கை நாயகன்

அது மட்டும் இல்லாமல் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் அதிகமான கோரிக்கை மனு கொடுக்கும் ஒரே சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தான். அதுவும் அவர் தொகுதி மீது அதிக அளவு அக்கறை வைத்து தொகுதி மக்கள் மீது அதிக அன்பும் அக்கறையும் கொண்டு வளர்ச்சி பணிகளில் அதிகமாக கோரிக்கை பணிகளை கொடுத்து கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார்.

சட்டமன்றத்தில் அதிகமாக கோரிக்கை மனு கொடுத்த  கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணனை கோரிக்கை நாயகன் என்றே அழைக்கலாம் என அமைச்சர் கூறினார். அமைச்சர் கூறியவுடன் தொகுதி பொதுமக்கள் திமுகவினர் கைத்தட்டி உற்சாகம் செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top